Friday, November 29, 2013

Specialties of Sri Paranthaman Panchangam - 01

​​
ஶ்ரீபரந்தாமன் பஞ்சாங்கத்தின் சிறப்புகளை கேள்வி - பதில் வாயிலாக அறிவோம்.

கேள்வி:- மற்ற பஞ்சாங்கங்களைவிட ஶ்ரீபரந்தாமன் பஞ்சாங்கத்தின் பொதுவான சிறப்பம்சங்கள் என்ன?
பதில்:- 1. மற்ற பஞ்சாங்கங்கள் சற்றேறக்குறைய 12 அங்குலத்துக்கு 10 அங்குல அளவில் 50 முதல் 100 பக்கங்களைக் கொண்டவையாக இருக்கின்றன,
அவற்றில் பல பக்கங்கள் விளம்பரம் செய்ய பயன்படுத்தப்பட்டுள்ளது.
நமது பஞ்சாங்கம் 8 அங்குலத்துக்கு 5 அங்குலம் அளவில் வெறும் 24 பக்கங்களைக் கொண்டது
அட்டைகளில் மட்டும் 3 விளம்பரங்கள் வெளியிடப்படுகின்றன.
இதனால் கைக்கடக்கமாக இருப்பதால் மிகச் சுலபமாக கைப்பைக்குள் வைத்து எல்லா இடங்களுக்கும் எடுத்துச்செல்ல ஏதுவாகிறது.

2. மற்ற பஞ்சாங்கங்களில் ஜோதிடர்கள் மற்றும் ஆராய்ச்சியாளர்களுக்கு மட்டுமே தேவையான ஒரு குடும்பஸ்தருக்குத்
தேவையே இல்லாத க்ரஹபாத சாரம், வருடம் முழுமைக்கான சந்த்ராஷ்டம தினங்களுக்கான பட்டியல் போன்ற விஷயங்கள்,
எல்லோருக்கும் அவ்வப்போது எளிதாகக் கிடைக்கக்கூடிய ராசி பலன் விஷயங்கள், ஆண்டு பலன்கள், எப்போதுமே மாறாத
விஷயங்களான திசா-புக்தி-அந்தர கணக்குகள், முஹூர்த்த நிர்ணய விஷயங்கள், சந்திர நிலைக் கட்டங்கள், ராஜா, மந்திரி
என ஆண்டு நவநாயகர் பலன்கள் என ஒரு முறைக்கு மேல் பயனில்லாத பல விஷயங்களைப் போட்டு பக்கங்களை நிரப்பியுள்ளனர்.

ஆனால் நமது பஞ்சாங்கத்தில் அவசியம் அடிக்கடி பார்க்கவேண்டிய சில மாறாத விஷயங்கள் - ராகு காலம், எமகண்டம், தினப் பொருத்தப் பட்டியல்,
பஞ்சாங்கத்தை உபயோகித்து தகவலை அறியும் முறைபற்றிய விஷயங்கள் தவிர மற்ற அனைத்தும் ஒவ்வோர் ஆண்டும்
அந்தந்த ஆண்டுக்குறிய விஷயங்கள் மட்டுமே தரப்பட்டுள்ளன.

3. மிக மிக முக்கியமானது:- நமது பஞ்சாங்கத்தில் முற்றிலும் அனைத்துத் தகவல்களும் ஆங்கில மணி நிமிடங்களாக மட்டுமே வழங்க்ப்பட்டுள்ளன. ஏனெனில்
நாழிகைக் கணக்கில் (மணியாக மாற்றாமல்) நேரத்தை அறியக்கூடியவர்கள் 1 சதவீதம் பேர் கூட உலகில் இல்லை.
மற்ற பஞ்சாங்கங்களில் இன்றும் மணி - நிமிடமாக மாற்றாமல் நாழிகைகளிலேயே வழங்கப்பட்டு வந்தன. நமது பஞ்சாங்கம்
வெளியான பிறகு தற்போது சில பஞ்சாங்கங்கள் நாழிகையுடன் மணி-நிமிடத்தையும் சேர்த்து வழங்குகின்றன. இன்னமும் பழைய பிரபலமான பஞ்சாங்கம் ஒன்று நாழிகைகளில்தான் வெளியாகிறது. மணி நிமிடங்கள் வழங்கப்பட்டுள்ள பஞ்சாங்களில்கூட இரவு பகல் வேறுபாட்டை அறிய சரியான வழிமுறை பின்பற்றப்படாததால்
குழப்பம் நிலவுகிறது. காலை - மாலை - விடிகாலை - இரவு என்கிற பதங்களைக்கொண்டு வேறுபடுத்துகிறார்கள். இவற்றை கம்ப்யூட்டர் தானாக (ஆட்டோமேடிக்காக)
குறிப்பிட வழியில்லை. வேலைஆட்களைக்கொண்டு குறிக்கச்சொல்லும்போது மிகுந்த பிழை உள்ளதை அறிகிறேன். ஆனால் நமது பஞ்சாங்கத்தில் ஆட்டோமேடிக்காக
எழுதுவதற்காகவும், கால-மால - இரவு - விடிகாலை என்கிற குறிச்சொல் தேவையின்றி, 24 மணிநேர கடிகார முறையைப் பயன்படுத்துவதுடன், இரவு 12 மணியை 24 மணி என்றும், பின்னிரவில் வரும் நேரங்கள் என்பதை சுலபமாக அறிய இரவு 12 மணிக்குப் பிறகு, காலை 6 மணிக்கு முன்பாக உள்ள நேரங்களை முறையே,
25, 26, 27, 28, 29 என்ற எண்களால் ஆட்டோமேடிக்காகக் குறிப்பிடச் செய்கிறோம். இதில் குழப்பம் வருவதற்கு வாய்ப்பில்லை.
மேலும், மற்ற பஞ்சாங்கங்களில் காலை 6.15 மணிக்கு முடியும் திதி அல்லது நக்ஷத்திரத்தின் பெயரைக் கொடுத்து நேரம் கொடுத்து அடுத்த வரியில் (இடையில்)
அடுத்த திதி அல்லது நக்ஷத்திரத்தின் பெயர் மற்றும் நேரம் வழங்கியிருப்பார்கள். இது மிகச் சரியானதுதான், ஆனால், நடைமுறையில் இதைப் பயன்படுத்தும்
சாதாரண மனிதர்கள் குறிப்பிட்ட தேதிக்கு நேராக உள்ள திதி அல்லது நக்ஷத்திரத்தை மட்டுமே கவனித்துச் செயல்படுவார். இதைத் தவிர்க்க நமது பஞ்சாங்கத்தில்
அரை நாழிகைக்குக் குறைவாக உள்ள திதி அல்லது நக்ஷத்திரத்தின் நேரம் அடுத்து வருவதுடன் கூட்டப்பட்டு குறிப்பிடப்படும். இதனால் அரை நாழிகை பிழை
ஏற்பட வாய்ப்பு உள்ளதே என சிலர் எண்ணலாம். ஆனால் அதற்கு வாய்ப்பில்லை, ஏனெனில் முஹூர்த்தங்கள், அமாவாசை போன்ற தர்பண காலங்களில் மட்டுமே
மேற்படி சரியான திதி, நக்ஷத்திர விஷயங்கள் தேவைப்படுவதால், முஹூர்த்தங்கள், சங்கல்பங்களில் மிகத் துல்லியமாக நேரம் கண்கிடப்பட்டு, வேறுபடும்
நேரங்கள் தேவையான இடங்களில் தெளிவாகக் குறிப்பிடப்பட்டுள்ளன.

4. நமது பஞ்சாங்கத்தில் முஹூர்தங்கள் உட்பட ஒரு மாதத்திற்கான அனைத்துத் தகவல்களும் ஒரே பக்கத்தில் (வெவ்வேறு பக்கங்களில் தேடச் சொல்லாமல்) வழங்கப்பட்டுள்ளன.

5. எந்தப் பஞ்சாங்கமும் இன்னமும் நடைமுறைப்படுத்தாத ஒரு சிறப்பம்சம் - க்ருஷ்ண பக்ஷம் - சுக்ல பக்ஷத்தை சுலபமாக அறிய கருப்பு - வெள்ளை வண்ண வேறுபாடு செய்து காட்டப்பட்டுள்ளது. திதிக்கு அருகிலேயே ச்ராத்த திதியைக் கொடுத்துள்ளபடியால் ச்ராத்த திதியைத் தவறாக குறிக்க வாய்ப்பில்லை.

6. முஹூர்த்த தேதிகள் பெரிதுபடுத்திக் காட்டப்பட்டுள்ளன.

7. மாதப் பிறப்பு, அமாவாசை போன்ற புண்ணிய காலங்களுக்கு மிக அருகாமையிலோ, ஏகாதசி போன்ற வ்ரத தினங்களிலோ நமது பஞ்சாங்கத்தில்
முஹூர்த்தங்கள் வழங்காமல் தவிர்க்கப்பட்டுள்ளது. மேலும், மிக முக்கியமான துருவம் உள்ளிட்ட பஞ்சக விதிகள், சிறந்த நக்ஷத்திர, சிறந்த லக்ன விதிகள், ஸ்தான சுத்த விதிகள் சரியாக அநுசரிக்கப்பட்டு முஹூர்த்தங்கள் வழங்கப்பட்டுள்ளன.

8. முக்கியமான விசேஷ தினங்களுக்கான படங்கள் சேர்கப்பட்டு அழகூட்டப்பட்டுள்ளது. மற்ற முக்கிய நிகழ்ச்சிகள் கவனத்தை ஈர்க்கும் வகைியல் பெரிய எழுத்தில் வழங்கப்பட்டுள்ளன.

9. மிக மிக முக்கியமாக, மிகச் சுலபமாக தேவையானவர்களின் நக்ஷத்திரத்திற்குப் பொருத்தமான சிறந்த முஹூர்தங்களை உபயோகிப்பாளரே தேர்ந்தெடுத்துக்கொள்ளத்தேவையான தகவல்கள் வழங்கப்பட்டுள்ளன.


கேள்வி:- மற்ற பஞ்சாங்களில் வழங்கப்பட்ட அவசியம் தேவைப்படக்கூடிய அனைத்துத் தகவல்களும் நம் பஞ்சாங்கத்தில் இடம்பெற்றுள்ளனவா?
பதில்:- அநேகமாக அவசியம் தேவையான அனைத்துத் தகவல்களும் வழங்கப்பட்டுள்ளன.
இடப் பற்றாக்குறை காரணமாக, கரணத்திற்கான நேரம் மட்டும் வழங்க இயலவில்லை. ஆனால் நடைமுறையில் கரணத்திற்கான பயன்பாடு எதுவும் இல்லை.
ஏனெனில் ப்ரயோகங்களில் "சுப யோக சுப கரண" என்றுதான் குறிப்பிடுகிறோம். (அடியேன் மட்டும் யோக - கரணங்களின் பெயர்களை குறிப்பிடும் வழக்கத்தைக் கொண்டுள்ளேன்.)
ஆங்கில வெளியீட்டில் கரணத்திற்கான நேரத்தையும் சேர்த்து வெளியிட உத்தேசித்துள்ளோம்.

தொடரும் ......
தங்கள் கேள்விகளை எழுதினால் - தொடர்ச்சியில் பதில் எழுத உதவியாக அமையும்.
நன்றியுடன்,
என்.வி.எஸ்






Fwd: Sri Paranthaman Panchangam - 2014- 2015 - Sri Jaya Year

Sri:
Expecting your requirement and contribution for this (10th) year Sri Paranthaman Panchangam!

Sri Jaya Varusham - 2014-2015.


_______________________________________________________________________
7
​6​
00+ Genuine Brahmin members joined in just 2
​8​
Months!
Our Home page is getting 2 lakhs+ visits per year!
Join Our FREE, FAST, FRUITFUL online  FORUM www.brahminsnet.com which is meant for: Panchangam, Matrimonial, Religious, Rituals, Shastram and Traditions.
Click here to svk location in google maps
Best Regards,
Best Wishes,
 NVS





Wednesday, October 30, 2013

தீபாவளி

அனைவருக்கும் உளம் கனிந்த தீபாவளி நல்வாழ்த்துகள் - என்.வி.எஸ்.


http://www.brahminsnet.com/forums/showthread.php/5629-

​தீபாவளி
நிர்ணய சிந்து—147:--- ""தைலே லக்ஷ்மீர் ஜலே கங்கா தீபாவள்யாஸ் சதுர்தசீம் ப்ராத: ஸ்நாநம் து ய: குர்யாத் ஸ: யம லோகம் ந பச்யதி"".

அதிகாலை 5-30 மணிக்கு முன்பாக நல்லெண்ணை தேய்த்து வெந்நீரில் ஸ்நாநம் செய்ய வேன்டும்.. புதிய வஸ்த்ரம் தரிக்கவும். பட்டாசு வெடித்து சந்தியா வந்தனம் , பூஜை செய்து உறவினர்களுடன் சேர்ந்து சாப்பிட்டு சந்தோஷமாக இருக்க வேண்டும்.

ஸ்நாநம் செய்யும்போது அபாமார்கம் என்னும் நாயுருவி செடியை கீழ் கண்ட ஸ்லோகம் சொல்லி மூன்று முறை தலையை சுற்றி தூர எறிந்து விட வேண்டும். இதனால் நரக பயம் ஏற்படாது.

நிர்ணய சிந்து-148----அபாமார்க மயே தும்பீம் ப்ரபுன்னாட மதாபரம்
ப்ராமயேத் ஸ்நான மத்யே து நரகஸ்ய க்ஷயாய வை
ஸீதா லோஷ்ட ஸமாயுக்த ஸ கண்டக தளான்வித
ஹர பாபம் அபாமார்கம் ப்ராம்யமாண: புந:புந;

தீபோத்ஸவ சதுர்தஸ்யாம் கார்யம் து யமதர்பணம் என்னும்படி தீபாவளியன்று காலை 7 மணிக்குள் சந்தியாவந்தனம் முடித்துவிட்டு யம தர்ம ராஜாவுக்கு தர்பணம் செய்ய வேண்டும்.

கிழக்கு நோக்கி அமரவும். ஆச்வயுஜ க்ருஷ்ண சதுர்தஸீ புண்ய காலே யம தர்பணம் கரிஷ்யே என்று சங்கல்பம் செய்து கொள்ளவும். சுத்த ஜலத்தால் . தர்பணம் செய்யவும். மஞ்சள் கலந்த அக்ஷதை, பூணல் வலம். உபவீதம்.தேவ தர்பணம்.

யமாய தர்மராஜாய ம்ருத்யவே தாந்தகாய ச, வைவஸ்வத காலாய சர்வபூத க்ஷயாய ச ஒளதும்பராய தக்னாய நீலாய பரமேஷ்டினே வ்ருகோதராய சித்ராய சித்ரகுப்தாயவை நம: இதயே தர்பணமாக செய்ய வேண்டும்.

1. யமாய நம: யமம் தர்பயாமி.
2. தர்மராஜாய நம; தர்மராஜம் தர்பயாமி
3. ம்ருத்யவே நம: ம்ருத்யும் தர்பயாமி.
4. அந்தகாய நம: அந்தகம் தர்பயாமி.

5. வைவஸ்வதாய நம: வைவஸ்வதம் தர்பயாமி
6. காலாய நம: காலம் தர்பயாமி.
7. சர்வபூத க்ஷயாய நம: ஸர்வபூத க்ஷயம் தர்பயாமி.
8. ஒளதும்பராய நம; ஒளதும்பரம் தர்பயாமி.

9. தத்நாய நம: தத்நம் தர்பயாமி
10. நீலாய நம: நீலம் தர்பயாமி
11. பரமேஷ்டிநே நம: பரமேஷ்டிநம் தர்பயாமி.
12. வ்ருகோதராய நம: வ்ருகோதரம் தர்பயாமி.
13. சித்ராய நம: சித்ரம் தர்பயாமி

14. சித்ர குப்தாய நம: சித்ரகுப்தம் தர்பயாமி..

ஜீவத் பிதாபி குர்வீத தர்பணம் யம பீஷ்மயோ: என்னும் வசனப்படி தந்தை இருப்பவர்கள், இல்லாதவர்கள் எல்லோரும் இதை செய்ய வேண்டும்.

Dear bmbcAdmin,
Thanks for Visiting Brahmins Net!
JAI HIND! Feel free to post whatever you think legal, moral and fun or useful!
Kindly invite your friends to this forum, if you feel it is worth!!
Click here to Invite Friends
Use Contact us only for Personal and Administrative purpose!



இதனால் பாபங்கள் யம பயம் விலகி அபம்ருத்யு மற்றும் வ்யாதியும் விலகும்..


தீபாவளி யன்று மாலையில் தீபம்

நிர்ணய சிந்து-141. " தத்தோ தீபஸ் சதுர்தஸ்யாம் நரக ப்ரீதயே மயா சதுர்வர்த்தி சமாயுக்த: சர்வ பாபாபநுத்தயே"

தீபாவளியன்று மாலையில் தனது வீட்டிலும் பக்கத்திலுள்ள சிவா/ விஷ்ணு அம்பிகை கோவில்களிலும் நல்லெண்ணெய் விட்டு நான்கு திரிகள் போட்டு விளக்கு ஏற்றி மேற் கணடவாறு ப்ரார்த்தனை செய்து கொள்ளவும்.

இதனால் நரக பயம் கிட்டாது. சந்தோஷமாக இருப்பார்கள்.

ஹேமாத்ரி புத்தகம் கூறுகிறது.; "ப்ரதோஷ ஸமயே லக்ஷ்மீம் பூஜயித்வா தத: க்ரமாத் தீப வ்ருக்ஷாஸ்ச தாதவ்யா: ஷக்த்யா தேவ க்ருஹேஷு சஸ்வலங்க்ருதேந போக்தவ்யம் ஸித வஸ்த்ரோப சோபிநா."